காதல் ஒரு கனவு
ரசனையுடன் காண்கிறேன் - நீ
அதில் வருவதால்...!
காதல் ஒரு வலி
சுகமாய் அனுபவிக்கிறேன் -நீ
தருவதால்..!
காதல் ஒரு சிலுவை
இன்பமாய் சுமைக்கிறேன் - நீ
என்னுள் இருப்பதால்..!
காதல் ஒரு கடல்
ஆனந்தமாய் மூழ்குகிறேன் - உன்னில்
மூழ்குவதால்..!
காதல் ஒரு காடு
தொலைந்து போகிறேன் - உன்னை
அடைய போவதால்..!
காதல் ஒரூ தீ
எரிந்து சாம்பாலகுகிறேன் - நீ
எரிப்பதால்..!
காதல் ஒரு மரணம்
தெரிந்தும் நேசிக்கிறேன் - அதை
தருவது நீ என்பதால்..!
இவை அனைத்துக்கும்
ஒரே காரணம் - உன்
மீதான "என் காதல்"
என்பதால்...!